சுகாதார சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பிற்குரிய நிறுவகம் 2012 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது நாட்டின் சுகாதார சேவையின் தரத்தை செயல்படுத்தும் தேசிய மையப்புள்ளி ஆகும்.
இது “மத்தியிலிருந்து நெறிப்படுத்தப்படுகின்றதும் உள்ளூரில் செயல்படுத்தப்படுகின்றதுமான மருத்துவம் சார்ந்த நோயாளரை மையப்படுத்திய தொடர்ச்சியான தர மேம்பாடு ”எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.
தற்போது இதன் நடவடிக்கைகள் சுகாதார சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசியக் கொள்கையின் (2015) படி மேற்கொள்ளப்படுகின்றன.
 
இதன்செயற்பாடுகள்ஏழுமுக்கியபகுதிகளின்கீழ்மேற்கொள்ளப்படுகின்றனஅவையாவன.
-   வாடிக்கையாளர்/ நோயாளரின் திருப்தி
-   நிர்வாக அமைப்பு மற்றும் செயல் மேம்பாடு
-   மருத்துவ வினைத்திறன்
-   அபாய/ இடர் முகாமைத்துவ ம்மற்றும் பாதுகாப்பு
-   தர மேம்படுத்தலுக்கான கலாசாரத்தை உருவாக்குதல்
-   பணியாளர்களின் அபிவிருத்தியும் நலனும்
-   தர மேம்பாடு மற்றும் நோயாளரின் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி
 
சுகாதார சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பிற்குரிய நிறுவகம் ஆனது வகை B ஆதார வைத்தியசாலைகள் மற்றும் அவற்றுக்கு மேலுள்ள வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ள தர முகாமைத்துவ பிரிவுகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயங்கள்        உடன் இணைந்த ஒரு தேசிய ரீதியான வலையமைப்பினை கொண்டிருக்கினறது.
 
தர முகாமைத்துவ பிரிவுகள் அவற்றிற்குரிய நிறுவனங்களில் தர மேம்படுத்தல் சம்பந்தமான நிகழ்ச் சித்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்