நோக்கு

அதி உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்குதல்

பணி

மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றதும் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதுமான தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலமாக முடியுமான அளவு மிகச் சிறந்த சுகாதார சேவையின் தரத்தை வழங்கும் பொருட்டு எல்லா பங்கு தாரர்களையும் இணைத்து சுகாதார சேவை நிறுவனங்களை தயார் செய்தல்.

இலக்கு

சுகாதாரம் சாராத மக்களின் எதிர்பார்ப்புகளை கவனத்திற்கொண்டு மருத்துவ வினைத்திறன் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற சுகாதார சேவைகளின் தொடர்ச்சியான தர மேம்படுத்தலை தக்க வைத்தல்.

குறிக்கோள்கள்

  • விருப்புகள்,எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கின்ற வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவையை வழங்குவதற்காக நிறுவனக் கட்டமைப்பை உறுதிப்படுத்துதல்.
  • தொடர்ச்சியான தர மேம்படுத்தலை உருவாக்கும் பொருட்டு வினைத்திறனான முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் செயற்பாடுகளை உருவாக்குதல்.
  • முடியுமான அளவு மிகச் சிறந்த விளைவைத் தருகின்ற ஆய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதுமான நெறிமுறைகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்தல்.
  • மருந்துகள் மருத்துவ செயன்முறைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஆகியவற்றினால் ஏற்படக் கூடிய ஆபத்தைக் குறைத்து நோயாளர்களினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
  • சுகாதார மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் நட்பு சுகாதார நிறுவனங்களை உருவாக்குவதில் பகிரப்பட்ட மதிப்புகளை உறுதி செய்ய தர மேம்பாட்டு உத்திகளை உள்வாங்குதல்.
  • சுகாதாரத் துறையில் உற்பத்தி திறன் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு திறமையான ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான பணியாளர்களை உருவாக்குதல்.
  • தர மேம்பாடு மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்.

சமீபத்திய செய்திகள்