இலங்கை சுகாதார சேவைகளில் ஒரு தேசிய தர உத்தரவாதத் திட்டத்தின் பரிணாமம் 1989 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது.
1995 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சினால் தேசிய தர உறுதித் திட்டம் பற்றிய கையேடு வெளியானவுடன் சில நிறுவனங்கள் தர மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கருத்தை ஏற்றுக் கொண்டன.
தர உத்தரவாத திட்டம் “உற்பத்தித்திறன் மூலம் தரமான சுகாதாரம்”என்ற கருத்துடன் 2000 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது.
காசில் ஸ்றீட் பெண்களுக்கான வைத்தியசாலை (போதனாவைத்தியசாலை) தேசிய தர உறுதித் திட்டத்தின் மையப்புள்ளியாக அடையாளம் காணப்பட்டது. பின்னர் காசில் ஸ்றீட் மருத்துவமனை சுகாதார அமைச்சின் தேசிய தர உறுதித் திட்டத்தின் மையப் புள்ளியாக அடையாளம் காணப்பட்டது. அப்போதிலிருந்து இந்த திட்டத்தை நாடு முழுவதும் உள்ள ஏனைய மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் விளைவாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை, பேராதெனிய போதானா வைத்தியசாலை அவற்றின் தர மேம்பாட்டுத் திட்டத்தை ஆரம்பித்தன. மற்றும் குருநாகல் மாகாண பொது வைத்தியசாலை தர மேம்பாட்டுத் திட்டத்தை மற்ற மருத்துவமனைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக மத்திய அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்ற நிறுவனங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் எனந ம்பப்பட்டது.
2004 – 2005 இல் மகியங்கணை ஆதார வைத்தியசாலையின் தர மேம்பாட்டுத் திட்டம் மாகாண சபைகள் மற்றும் பிற சிறிய மருத்துவமனைகளால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கான பாதையை வகுத்தது.
இந் தஅனுபவத்துடன் வடமேல் மாகாணத்தில் பல்வேறு நிர்வாக நிலைகளில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் ஒரு பைலட் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது சுகாதார அமைச்சிற்கான தர மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்தல் பற்றிய நுண்ணறிவைக் கொடுத்தது.
2007-2009 இல் இந்த அனுபவத்துடன் இந்த திட்டம் தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள எட்டு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த முன்னோடி ஆய்வுகளின் மூலம் தர மேம்பாட்டுத் திட்டத்தை  எளிதாக்குவதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு மாவட்ட தர காப்பீட்டு பிரிவு மற்றும் தர முகாமைத்துவப் பிரிவு ஆகியவை அகற்றப்படுவதும் முக்கியம் என்பது கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் தர மேம்பாட்டுத் திட்டத்தை எளிதாக்குவதற்கு ஒரு உச்ச அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது . அதனால்உலகவங்கி-HSDPநிதியின்கீழ்தேசியதரஉறுதித்திட்டத்திற்கானஒருகட்டிடம்கட்டப்பட்டது. சுகாதாரத்தின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான நிறுவகத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடுகளை தீர்மானிப்பதற்கு ஒரு ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டு 2012 ஆகஸ்டில் ஆணையிடப்பட்டது.
மத்தியிலிருந்து நெறிப்படுத்தப்படுகின்றதும், உள்ளூரில் செயல்படுத்தப்படுகின்றதுமான மருத்துவம் சார்ந்த நோயாளரை மையப்படுத்திய தொடர்ச்சியான தர மேம்பாட்டுத்  திட்டத்தின் கொள்கையின் கீழ் நிறுவகத்தின் பணிப்பாளர் செயல்படுகின்றார்.
சுகாதாரத்தின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான நிறுவகம் 2012 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து திட்டமிட்ட முறையில் சுகாதார அமைச்சின் தர மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான மிகச் சிறந்த பணிகளைச் செய்துள்ளது. இதில் கண்காணிப்பு மதிப்பீட்டு வழி முறைகள் ஆகியவையும் மத்திய அமைச்சிற்கான (42) காலாண்டு செயல்திறன் மறு ஆய்வூக் கூட்டங்கள் மற்றும் மாகாண நிறுவனங்கள் வகை B ஆதார வைத்தியசாலைகள் மற்றும் அதற்கு மேல் உள்ள (101) வைத்தியசாலைகளுக்கு வருடத்திற்கு இரு தடவையிலான செயல்திறன் மறு ஆய்வூக் கூட்டங்கள் என்பனவையும் உள்ளடங்குகின்றன. மேலும் நிறுவகம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 2013 இல் ஒரு தளத்தையும் உருவாக்கியது.
2013 ஆம் ஆண்டில் இருபது பொது குறிகாட்டிகள் மற்றும் செயல்திறன் குறிகாட்டிகள் (சரிபார்ப்புப்பட்டியல்) மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான பாதுகாப்பு சரிபார்ப்பு ப்பட்டியல்(சுற்றறிக்கைமற்றும்வழிகாட்டிகள்மூலம்) அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் 2015 ஆம் ஆண்டில் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய கொள்கையின் வளர்ச்சியைத் தவிர, தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பிரதான பயிற்சியாளர் கையேடு(Master Trainee Manual) மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
5S,CQI மற்றும் TQM தொடர்பான பயிற்சிகளுக்குரிய பயிற்சியாளார்களுக்கான வருடாந்த பயிற்சிப் பட்டறைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் மருத்துவமனைகளின் நடுத்தர மற்றும் உயர்மட்ட முகாமையாளர்களுக்கான நோயளார்களின் பாதுகாப்பு குறித்த பயிற்சிப் பட்டறைகளும் இடம்பெற்றன.
2016 இல் பாதகமான நிகழ்வுகள் அறிக்கையிடல் பொறிமுறை நிறுவப்பட்டதுடன் மீள் அனுமதிப் படிவங்கள் மற்றும் வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மருத்துவ மேற்பார்வை செய்யும் பயிற்சிகளும் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகள்