மருத்துவ மேற்பார்வை என்பது தர மேம்பாட்டு செயல்முறையாக வரையறுக்கப்படுகின்றது. இது நேர்த்தியான அளவூகோல்களை அடிப்படையாகக் கொண்டு, பராமரிப்பின் முறையான மீளாய்வினூடாகவும் மாற்றத்தை செயல்படுத்துவதன் மூலமும் நோயாளர் பராமரிப்பு மற்றும் விளைவுகளை மேம்படுத்தும்.

அதிக முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணவும், செய்யப்பட்ட மாற்றங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், அடிப்படைத் தரவுகளுடன் ஒப்பிடும் போது செயல் திறன் தரவைப் பெறவும், பகுப்பாய்வு செய்யவும், விளக்கவும் தேவையான ஒரு பாதையை உருவாக்குவதற்கு ஒரு நிறுவனத்திற்கு உதவி செய்கின்றது.

சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான நிறுவகம் சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவை மேம்படுத்தல் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ மேற்பார்வைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான, மருத்துவ மேற்பார்வை பயிற்சிப் பட்டறைகளை நடாத்துகின்றது.

சமீபத்திய செய்திகள்