வழிகாட்டிகள் செயல்திறன் மற்றும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும் மருத்துவத்துறையில் மாறுபாடுகளைக் குறைத்தல், விலையுயர்வை குறைத்தல் தவிர்க்க கூடிய தவறுகள் மற்றும் பாதகமான நிகழ்வுகளைக் குறைத்தல் போன்ற பல விதமான நோக்கங்களை கொண்டுள்ளன. அவை பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற நடைமுறைகள் அந் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்கான தர நிர்ணய வெட்டுப் புள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவ் வெட்டுப் புள்ளிகள் நடைமுறைகளை மேற்பார்வை செய்து ஒப்பிட்டு அவற்றை மேம்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட நபருக்கு உதவி செய்யும்.

2010 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு JICA உடன் இணைந்து இலங்கையின் மருத்துவமனைகள் சுகாதார நிகழ்வுகள், நோய்த் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட பயிற்சி மையங்கள் வரையிலான பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த தொடர் வழிகாட்டிகளை உருவாக்கியது.

2012 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பிற்குரிய நிறுவகம் மருத்துவம் மற்றும் தரம் தொடர்பான வழிகாட்டிகளின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் பங்கு சம்மந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து நிபுணர் குழு கூட்டங்களை நடாத்துதல் தேவையான துணைக்குழுக்களை நியமித்தல் பங்குதாரர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் அச்சிடுதல் என்பவற்றை உள்ளடக்கியது. மேலும் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பிற்குரிய நிறுவகம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டிகளையும் கிடைக்கப் பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளது.

               

 

  • மத்திய தொற்றுநீக்கல் விநியோகப் பிரிவின் முகாமைத்துவம் மற்றும் வடிவமைப்பு குறித்த வழிகாட்டியைத் தயாரித்தல்(CSSD)
  • நுண்ணுயிரிலாளர்கள், நிர்வாகிகள், மருத்துவப் பொறியியலாளர்கள், கட்டமைப்பு பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய ஐந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
  • நான்கு துணைக்குழுக்களின் கூட்டமும் நடைபெற்றது.
  • MRI பாதுகாப்பு வழிகாட்டியின் உருவாக்கம்
  • வரைபு செய்யப்பட்ட ஆவணத்தை இறுதி செய்ய கடைசி ஆலோசனைக் கூட்டம் நடாத்தப்படும்.
  • நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும்.
  • தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு ஒரு வரைபு தயாரிக்கப்பட்டது.
  • தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த தேசிய வழிகாட்டியின் உருவாக்கம்
  • முக்கிய விடயங்களைப் பற்றி கலந்துரையாடவும், அவற்றை மாற்றியமைக்கவும் 08 துணைக் குழுக்கள் கூட்டப்பட வேண்டும்.
  • மேலும் 11 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டவுள்ளன.
  • ஓர் எதிர்காலத்திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.

விசேட நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், குழந்தை நல விசேட வைத்திய நிபுணர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகிகள், தொற்றுக் கட்டுப்பாட்டு பிரிவு வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் தர முகாமைத்துவப் பிரிவு உத்தியோகத்தர்கள் அடங்கலாக அரச மருத்துவமனை ஊழியர்களும், தனியார் பிரிதிநிதிகளும் பங்கேற்ற ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்