சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான நிறுவகம் தரம் தொடர்பான குறிகாட்டிகள்,மருத்துவ குறிகாட்டிகள் மற்றும் மருத்துவமனை புள்ளி விபரங்கள் தொடர்பான குறிகாட்டிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தரப்படுத்தப்பட்ட மாதிரி ஒன்றை பயன்படுத்துகின்றது. மற்ற நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்திறனை கற்றுக் கொள்ளும் அதே வேளையில் தரம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் பற்றிய எண்ணக்கருக்களை நிறுவனம் தாமாகவே பெற்றுக் கொள்ள முடியும். நிபுணர்கள் குழு ஒவ்வொரு சுகாதார நிறுவனத்திற்கும் அவர்களின் செயல்திறன் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குகின்றது.

சுகாதாரத்திட்டத்தின் கீழ் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான நிறுவகம் மருத்துவமனை தரச் செயல்திறன் மதிப்பீட்டுக் கருவி (QPET) உள்ளடங்கலாக மருத்துவமனைகளின் தரச் சேகரிப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்