இலங்கை என்பது நோயாளிக்கு நேரடி செலவில்லாமல் செலவு குறைந்த சுகாதார சேவையை வழங்குவதில் உலகில் புகழ் பெற்ற நாடாகும். பிரவசத்தின் போது தாய் மரண விகிதம், பிரவசத்தின் பின்னர் சிசு மரண விகிதம், பிறக்கும்போதான ஆயுள் எதிர்பார்க்கை மற்றும் இன்னும் பல சுகாதார குறிகாட்டிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்கவையாகும். இலங்கை இந்த பிராந்தியத்தில் சிறந்த குறிகாட்டிகளுக்குப் புகழ்பெற்றிருந்த போதிலும், குறிப்பாக மருத்துவமனைகளில் சுகாதார பராமரிப்பினை வழங்குவதில் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் இன்னும் பலவற்றை மேற்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்லூரிகளுடன் இணைந்து மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் ஆகிய நான்கு முக்கிய சிறப்புத் துறைகளுக்கான மருத்துவ குறிகாட்டிகளை சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகம் (DHQS) தயாரித்துள்ளது. குறிகாட்டிகளைத் தயாரிப்பதற்காக ஒவ்வொரு துறைகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு முக்கிய சிறப்புத் துறையையும் சேர்ந்த ஐந்து மருத்துவ குறிகாட்டிகள் உள்ளன, அவை சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகத்தின் (DHQS) காலாண்டு செயல்திறன் மீளாய்வுக் கூட்டங்களில் பராமரிப்பின் தரத்தை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவத்தின் மருத்துவமுறைக் குறிகாட்டிகள்:

  • ST Elivation உடன் வந்த நோயாளிகளுக்கு 30 நிமிடத்திற்குள் ஃபைப்ரினோலிடிக் (Fibrinolytic) கொடுக்கப்பட்ட நோயாளிகளின் சதவீதம்
  • மாரடைப்பு (STEMI) அல்லது PCI சிகிச்சையைப் பெறுதல்
  • மருத்துவமனைக்கு வந்த 90 நிமிடங்களில் சிகிச்சை வழங்குதல் (PCI).
  • இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது உபவாச இரத்த சீனி பரிசோதனை (FBS) அளவிடப்படுகிறது அல்லது HbA1C குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அளவிடப்பட்டு FBS < 126mg/dl மற்றும் HbA1C < 7ஐ இலக்காகக் கட்டுப்படுத்தும் மருத்துவ கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் நீரிழிவு நோயாளிகளின் சதவீதம்.
  • இருதய அபாயங்கள் உள்ள நோயாளிகளில் <140 / 90mmHg ஐ இலக்காகக் கொண்ட இரத்த அழுத்த நோயாளிகளின் சதவீதம்.
  • மருந்துச் செயல்முறையின் எந்த கட்டத்திலும் உரிய நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் நிருவாகத்தில் ஏற்பட்ட பிழையின் சதவீதம் (அதாவது, பரிந்துரைத்தல், படியெடுத்தல், விநியோகித்தல், நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு)
  • வெளிநோயாளர் / அவசர சிகிச்சைப் பிரிவு / ஆரம்ப பராமரிப்புச் சேவை நெபுலைசேஷன்களைப் பெறும், ஆஸ்துமா மருத்துவர் ஒருவரால் கண்டறியப்பட்ட நோயாளிகளின் சதவீதம்.

அறுவை சிகிச்சையின் மருத்துவ குறிகாட்டிகள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சையை ஒத்திவைக்கும் விகிதம்.
  • குறியிடப்பட்ட செயல்பாடுகளில் காத்திருக்கும் நேரம். புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அல்லாதவையாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • அறுவை சிகிச்சை பாதுகாப்பு சரிபார்ப்பு பட்டியலைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை வசதிகளின் சதவீதம்.
  • அறுவை சிகிச்சையின் பின்னான கிருமித்தொற்று விகிதம்.
  • ஒரு பொதுவான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தங்கும் சராசரிக் காலம் (உ.ம்: குடல் அலர்ஜி, அடிவயிறுக் குடலிறக்கம், நீரிழிவு காரணமாக தொற்றுக்குள்ளான உடலுறுப்புக்களை அகற்றல்)

சிறுவர் மருத்துவத்தின் மருத்துவமுறைக் குறிகாட்டிகள்

  • ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு (வெளியே பிறந்த குழந்தை) அல்லது மகப்பேற்றுப் பிரிவில் இருந்து அதே மருத்துவமனையில் (அதே வைத்தியசாலையினுள் பிறந்த குழந்தை) பிரசவத்தின் பின்னரான பிரிவுக்கு மாற்றும் போது பிரசவத்தின் பின்னரான பிரிவில் அனுமதிக்கப்படும் போது இரத்த சர்க்கரை குறைந்திருத்தல்.
  • Re-admission to the ward with wheezing who had bronchiolitis under oneyear of age.
  • Readmission rate within 14 days following discharge from a Paediatric ward.
  • டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் காரணமான இறப்பு வீதம்.

மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் மருத்துவமுறை குறிகாட்டிகள்

  • பிறப்பு தூண்டல் வீதம் (Labor Induction Rate)
  • எபிசியோடமி (Episiotomy) வீதம்.
  • சிசேரியன் அறுவைச் சிகிச்சை வீதம்.
  • குழந்தைப் பிறப்பு கண்காணிப்பு அட்டவணை (Partogram) சரியான பயன்பாடு
  • வழக்கமான பிரதான பெண் நோயியல் அறுவை சிகிச்சைக்கான சராசரி காத்திருப்பு நேரம்

சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகமானது (DHQS) தற்போது நான்கு முக்கிய சிறப்புத் துறைகளில் மருத்துவமுறைக் குறிகாட்டிகளை திருத்துவதற்கான செயல்பாட்டில் உள்ளது. அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் ஆகியவற்றில் ஆரம்ப ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சமீபத்திய செய்திகள்