மருந்துப் பாதுகாப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமான இறப்புகள் மற்றும் அங்கவீனங்களில் பங்களிப்புச் செய்து உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டுதோறும் 180,000 இறப்புகள் ஏற்படுவதால் மருந்துகளின் தவறான பயன்பாடானது இறப்பு ஏற்படுவதற்கான மூன்றாவது முக்கிய காரணமாகும் என்று 2016 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டது. மருந்துகளின் தவறான பயன்பாடானது பெரும்பாலான தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சம்பவங்களுக்கு காரணமாகிறது. அதிக வருமானம் பெறும் நாடுகளிலிருந்து அறிக்கையிடப்பட்டதை விட நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகளில் ஏற்படும் பிழைகள் மிக அதிகமானவை எனக் கருதப்படுகின்றன.

உலக சுகாதார நிறுவனமானது (WHO) 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது அமைச்சு உச்சி மாநாட்டில் மருந்து பாதுகாப்பை உலகளாவிய நோயாளி பாதுகாப்புச் சவாலாக அறிவித்தது. இந்த சர்வதேச உச்சிமாநாட்டில், மருந்து பிழைகள் காரணமாக கடுமையான தீங்குகளை அடுத்த 5 ஆண்டுகளில் 50% ஆகக் குறைப்பதற்கான ஒரு தேசிய செயல் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு உறுதிமொழி அளிக்குமாறு அனைத்து நாடுகளும் கோரப்பட்டன.

சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகமானது (DHQS) என்பது இலங்கையில் உள்ள தேசிய சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் அதியுயர் அமைப்பாகும். பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளுக்கான திட்டங்களை வலுப்படுத்துவது என்பது சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையில் ஒரு முக்கிய மூலோபாய பகுதியாகும்.

மருந்து பாதுகாப்பு குறித்த உலக சுகாதார நிறுவன (WHO) நிபுணர் பணிக்குழுவில் உறுப்பினராக உள்ள கொழும்பு பல்கலைக்கழக மருந்தகவியல், மருத்துவ பீடம் பேராசிரியராகிய பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பத்தி, இலங்கைக்கான மருந்து பாதுகாப்பு குறித்த தேசிய செயல் திட்டத்தின் வரைவினை அபிவிருத்தி செய்ய முன்முயற்சி எடுத்து அதை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகச் சுகாதார அமைச்சிற்குச் சமர்ப்பித்தார்.

சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகமானது (DHQS) மருந்துப் பாதுகாப்பு தொடர்பான உத்தேச செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அதனை முடிவுறுத்துவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் முன்மொழியப்பட்ட திட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஆறு ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தியது.

ஆலோசனைக் கூட்டங்கள் சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் (DHQS) ஏற்பாடு செய்யப்பட்டதுடன் தொழில்நுட்ப உதவிகளை உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பதி ஆகியோர் வழங்கினர்.

செயல்திட்டமானது, இலங்கையில் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளில் மருந்து பிழைகளை குறைக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. செயல்திட்டமானது, 2020 ஆம் ஆண்டில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலுடன் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகள்