ஆரம்பத்தில் இருந்தே இலங்கையில் சுகாதார சேவைகளின் முதன்மை குறிக்கோளாவது சிறந்த தரமான சுகாதார சேவையை வழங்குதல், வழங்கும் நேரத்தில் இலவசம் மற்றும் சமமான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியனவாகும். எவ்வாறாயினும், நாட்டில் உள்ள மக்கள்தொகை, தொற்றுநோயியல் மற்றும் சமூக மாற்றங்களிலிருந்து சுகாதார அமைப்பு புதிய சவால்களை எதிர்கொள்கிறது. சுகாதார அமைப்பு தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள்களாவன ஆரம்ப மட்டத்திலான சுகாதார பராமரிப்பு நிறுவனங்களின் குறைந்த அளவு பயன்படுத்தல்இ சுயமாக மருத்துவ சேவையை நாடும் கலாசாரம் மற்றும் ஒரு பயனுள்ள மருத்துவ சேவை பரிந்துரைப்பு பொறிமுறையின் பற்றாக்குறை, இதன் விளைவாக மிகவும் அண்மித்த ஆரம்ப பராமரிப்பு நிறுவனங்களைத் தவிர்த்துச்செல்லும் நிலைமை காணப்படுகின்றது. அதே நேரம் பராமரிப்பு ஏற்பாடானது அவ்வப்போது பெறப்படுவதாகவும் தொடர்ச்சியற்றதாகவும் உள்ளது.

ஆரம்பப் பராமரிப்பு மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதாரத்தை (P.H.C) மேம்படுத்துவதில் இலங்கை அரசு தொடர்ந்து அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது. இந்த முயற்சிகளின் குறிக்கோள், நாட்டு மக்கள் அனுபவிக்கும் நோய்ச் சுமையுடன் தொடர்புடையதாக ஒருங்கிணைந்த, விரிவான மற்றும் திறமையான சுகாதார சேவையின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் உலக தரத்திலான சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் அதியுயர் நிறுவனமாகிய, சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகமானது (DHQS) மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேகைள் பணியக (RDHS) மட்டங்களில் ஆரம்பப் பராமரிப்பு நிறுவனத்தால் வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தை மதிப்பீடு செய்யக்கூடிய கண்காணிப்புக் கருவியொன்றையும் குறிகாட்டிகளையும் தயாரிக்கும் பணியை மேற்கொள்கின்றது.

பின்வருவனவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் பங்கேற்புடன் கண்காணிப்புக் கருவியை சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகமானது (DHQS) உருவாக்கியது:

  • சரிபார்ப்பு பட்டியல்களை அடிப்படையாகக் கொண்ட பௌதிக உட்கட்டமைப்பின் தூய்மை மற்றும் பிற அம்சங்கள்.
  • மருந்துகளின் விரையத்தைத் தடுத்தல் மற்றும் கிடைக்கும் தன்மை.
  • மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் நேரங்கள், நுழைவு முதல் வெளியேறும் வரை முழு செயல்முறைக்கும் நேரம் எடுக்கப்படுகிறது.
  • சரிபார்ப்பு பட்டியலின் அடிப்படையில் வாடிக்கையாளர் வழங்குனரின் தொடர்புகளைக் கண்காணித்தல்.
  • பொருத்தமான வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை ஆராய்வதற்குப் பதிவுகளைப் பயன்படுத்துதல்.
  • பெறப்பட்ட பராமரிப்பின் தரம் குறித்த வாடிக்கையாளர் உணர்வுகள்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காலாண்டுக்கு ஒரு முறை மேற்பார்வை செய்து அறிக்கைகளை மேலதிக ஆய்வுக்காக சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

 

சமீபத்திய செய்திகள்