சுகாதார பராமரிப்பு மற்றும் நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பரஸ்பர கற்றலே முதன்மை வழியாகும். இதற்கு நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார நிர்வாகிகள், நிரல் அமைச்சிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள், சிறப்புத் திட்டங்கள் மற்றும் பலதுறைகளையும் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட மாகாண அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பராமரிப்பின் தரத்தை அதிகரிக்க அல்லது நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மருத்துவமனைகள் அல்லது பிற சுகாதார அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட கருவிகள், சரிபார்ப்பு பட்டியல் மற்றும் நடைமுறைகள் இந்த இடத்தைப் பயன்படுத்தி பரப்பப்படுகின்றன. சுகாதார நிறுவனங்கள் வெற்றிகரமான தலையீடுகளிலிருந்து கற்றுக் கொள்ளலாம் என்பதுடன் தேவையான சீராக்கலுடன் தங்கள் சொந்த நிறுவனங்களை செயல்படுத்த முடியும்.

சுகாதாரப் பராமரிப்புத் தொழிலாளி மற்றும் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த நடைமுறைகளைப் பகிருதல் - உலக நோயாளர் பாதுகாப்பு தினம் 2020

சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த நடைமுறைகளின் எழுத்து ஆக்கங்கள் சுகாதார நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்டன. சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகமானது (DHQS) சிறந்த நடைமுறைகள் குறித்து 134 எழுதுதல்களைப் பெற்றுள்ளது (மத்திய அமைச்சு -80, மாகாணம் -54). ஒவ்வொரு எழுத்தையும் நிபுணர்கள் குழு மதிப்பாய்வு செய்ததுடன் இருபது (20) அளவுகோல்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டதுடன் 20 தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் இணைய மூலமாக வாய்வழி சமர்ப்பித்தல்களாக வழங்கப்பட்டன. இவை வெளிவாரி நிபுணர்களின் குழுவால் மீளாய்வு செய்யப்பட்டன.

2020 செப்டம்பர் 17 ஆம் தேதி சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியகத்தில் (DHQS) இல் நடைபெறவிருக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொள்ள தலா ஐந்து சிறந்த நடைமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகள்